Thursday, August 16, 2007

முதற் கவிதை

குஜராத் பூகம்பம்

புஜ் என்ற புண்ணிய பூமி புதையுண்டது;
புற்களும் பூக்க வழியில்லை!

மழலையின் மனதில் மழலை கேள்விகள்; ஆ!
மனித வர்க்கத்தின் மகத்துவத்தின் ஆரம்பமா...

நிலச்சரிவில் பல்லுயிர்களின் தத்தளிப்பு;
அக்துஉணர்த்தாது உனது இரக்க குணத்தை,

ஐம்பூதங்களில் ஒன்றான உம்மையும் வணங்கினோமெ;
ஐயகோ! அனைவரையும் பழி தீர்த்த்விட்டாய்!

நிலச்சரிவில் பல்லுயிர்களின் தத்தளிப்பு;
அக்து உணர்த்தாது உனது இரக்க குணத்தை!

நிவாரண நிதியென நிறைய தருகின்றனர்.
என்நிலையில் தருவதற்கோர் இடமில்லை!

நிலையில்லா மனதின்கண் ஒன்றை தருகிறேன்;அக்து எனது கண்ணீர்!....................


2001 ஆகஸ்ட், ஆனந்த விகடனில் வெளியானது.

1 comment:

ச.மனோகர் said...

கவிதகளை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.இருந்தாலும் படிக்கும் போது சோகமாக இருந்தது.