Saturday, August 18, 2007

முதல் ஷுட்டிங்..........


முதல் நாள் ஷூட்டிங் என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை 5 மணிக்கே எழுந்து, சந்தோசமாக கிளம்பி,ஆபிஸ்க்கு சென்றேன்......


வழக்கமாக வைக்கும் வணக்கத்தை விட, அன்று வைத்த வணக்கம் சற்று கிளர்ச்சியானது.அங்கிருந்து சரியாக 6 மணிக்கு கிளம்பி ஸ்பாட்டுக்கு சென்றோம்.......


ஸ்பாட்டுக்கு சென்றவுடன் காலை டிபன்,புதுமையான பரிமாறலை, புத்துணர்ச்சியுடன் விரும்பி சாப்பிட்டேன்....


பிறகு,ஆரவாரத்தின் ஆரம்பம், எல்லோரும் ஒன்று திரண்டனர்.சற்று புரியவில்லை.... ஆம்! படத்துக்கான பூஜை.

எல்லோரும் சாமி கும்பிட்டனர். நானும் (உண்மையில்)சாமி கும்பிட்டேன்..


முதல் ஷாட்டுக்கான ஒத்திகை. என்மேல் சுமத்தப்பட்ட வேலையில் நான் மும்முரமாகிறேன்.


முதல் மானிட்டர் பார்க்கப்படுகிறது.பிறகு.,


அனைவரும் அவரவர்க்கான வேலையில் ஐக்கியமாக,

டைரக்டர் கட்டளையிடுகிறார்.


"சைலன்ஸ்"

"சவுண்ட்"

"கேமரா"

"ரோலிங் சார்"


"ஆக்சன்"


இந்த வார்த்தையை கேட்டவுடன் சற்று உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது.


இந்த வார்த்தையை நான் சொல்ல, இன்னும் எத்தனை காலம் போராட வேண்டுமோ தெரியவில்லை.....


பிறகு மதிய இடைவேளை.


சாப்பாட்டிற்காக எல்லோரும் தயாராகினர்.எவரேனும் கூப்பிடுவார்களோ என்ற தயக்கத்தில் நின்றேன்.யாரும் கூப்பிடவில்லை. பிறகு நானாக எனது உணவை தேடி சாப்பிட்டேன்..


மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பமானது.. ஒரு சுவாரஸ்யமான விசயம். ஸ்பாட்டில் ஹீரோ, ஹீரோயினை தூக்க வேண்டும்.அப்பொழுது திடிரென ஹீரோயின் பாவாடை சுருங்கிவிட்டது.


ஒருவித பயத்துடன் நின்று கொண்டிருந்த போது, திடீரென டைரக்டர் குரல்.,

முத்து அந்த பாவாடையை சரி செய் என்று கட்டளையிட்டார்.உடனே நான் அவசரத்தில் அங்கு சென்று, எனது இடது கையால் அதனை சரி செய்தேன்.

டைரக்டர் உடனே,முத்து அது தொட வேண்டிய இடம்தான் என்று சொன்னார்.உடனே ஸ்பாட்டில் பயங்கர சிரிப்பொலி..


பிறகு மணி 6.30., பேக்-அப் நேரம். நானும் எனது பொருட்களை பத்திரப்படுத்தினேன்.


அசோசியேட் டைரக்டர் திடிரென என் கையில் ஒரு பேப்பரை திணித்தார்.அவசரமாக கிளம்பியதால் நானும் கவனிக்கவில்லை.


எல்லோரும் கிளம்பினர். நானும் முதல் நாள் நல்ல படியாக முடிந்தது என்ற சந்தோசத்தில் கிளம்பினேன்.


வீட்டுக்கு வந்ததும் எதேச்சையாக பார்த்தேன். எனது பையில் 50 ரூ. எனக்கான பேட்டா...நான் வாங்கிய முதல் சினிமா சம்பளம். அமைதியான சந்தோசம்...


இன்றுவரை அதனை பாதுகாத்து வருகிறேன்...............










Thursday, August 16, 2007

முதற் கவிதை

குஜராத் பூகம்பம்

புஜ் என்ற புண்ணிய பூமி புதையுண்டது;
புற்களும் பூக்க வழியில்லை!

மழலையின் மனதில் மழலை கேள்விகள்; ஆ!
மனித வர்க்கத்தின் மகத்துவத்தின் ஆரம்பமா...

நிலச்சரிவில் பல்லுயிர்களின் தத்தளிப்பு;
அக்துஉணர்த்தாது உனது இரக்க குணத்தை,

ஐம்பூதங்களில் ஒன்றான உம்மையும் வணங்கினோமெ;
ஐயகோ! அனைவரையும் பழி தீர்த்த்விட்டாய்!

நிலச்சரிவில் பல்லுயிர்களின் தத்தளிப்பு;
அக்து உணர்த்தாது உனது இரக்க குணத்தை!

நிவாரண நிதியென நிறைய தருகின்றனர்.
என்நிலையில் தருவதற்கோர் இடமில்லை!

நிலையில்லா மனதின்கண் ஒன்றை தருகிறேன்;அக்து எனது கண்ணீர்!....................


2001 ஆகஸ்ட், ஆனந்த விகடனில் வெளியானது.

Wednesday, August 15, 2007

எழுத்துக்கள்

எழுத்துக்கள் என்ற கிறுக்கலை எழுதுவதற்கு என்னை வகைப்படுத்திய மூன்றாம் தரத்து மனிதர்களுக்கு(எழுத்தாளர்களுக்கு) எனது நன்றிகள்.

இந்த கிறுக்கலை எழுதுவதற்குள் ஏகப்பட்ட இடர்ப்பாடுகள்.காரணம் என்ன எழுதுவது!எப்படி எழுதுவது!ஏன் எழுதுவது! இப்படி பலதரப்பட்ட கேள்விகள்.இறுதியில் கேள்விகளுக்கும் முற்றுபெறாத பதிலாக எனது எழுத்துக்களை இங்கு இடம்பெயர வைத்துவிட்டேன்.

நான் படித்த மிகக்குறிய எழுத்துக்கள்.அவ்வெழுத்துக்கள் என்னை பலப்படுத்தியதா! பாதித்ததா!புரிந்ததா!புரியவில்லையா! தெரியவில்லை. ஆனால் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியது என்பதை உறுதியாக சொல்வேன்.

படிக்கும் பழக்கம் பல நாட்களாகவே இல்லை. தொழிலின் வழியால் ஏளனப்பார்வையுடன் சில புத்தகங்களை அரசல் புரசலாக படித்தேன். அப்புத்தகங்கள் ஒருவித தன்னம்பிக்கையை கொடுத்தன தவிற, படிக்கும் ஆர்வத்தை தூண்டவில்லை.

ஏன் என்னால் இப்பழக்கத்தை பழக்க முடியவில்லை. மறைமுகமாக ஆராய்ந்த போது எனக்குள் உள்ள "அகம்"
வெளிப்பட்டது. அந்த அகம்தான் பிறரின் எழுத்துக்களை கேலி செய்தது.

எனது தொழிலான சினிமாவில், எனக்கான அங்கீகாரம், எழுத்துக்களால், புத்தகங்களால் மறுக்கப்பட்டபோதுதான் சற்று தலை குனிந்தேன்.

எனக்கும்,எழுத்துக்கும் உள்ள இடைவெளி எனக்கு பல அனுபவங்களை கற்றுத்தந்தது.ஆம்,எழுதுவதற்கு முன்பு எழுத்தை பற்றிய வரையறையும், எழுதுவதற்க்கு பின்பு உள்ள வரையறையும் சேர்ந்து, எழுத்தை பற்றிய ஒரு வரையறையை தந்துள்ளதாக உணர்கிறேன்.

இந்த கிறுக்கலின் ஆரம்பம் ஏதோ ஒரு நல்ல முடிவை நோக்கி பயணிக்கிறது என்பது உண்மை.மேலும் கிறுக்கல்கள்தான் நாளை தெளிவாக்கப்படும் என நம்புகிறேன்........

SCRIBBLING

HI .,
I JUST WANT TO WRITE SOMETHING IN FUTURE.AS A WRITER I SHOULD KNOW BASIC OF WRITING.

IN MY INITIAL STAGE, IAM STARTING MY SCRIBBLING WITH MY KNOWLEDGE.

MY SCRIBBLING ONLY WILL MAKE ME AS A GOOD WRITER.