எழுத்துக்கள் என்ற கிறுக்கலை எழுதுவதற்கு என்னை வகைப்படுத்திய மூன்றாம் தரத்து மனிதர்களுக்கு(எழுத்தாளர்களுக்கு) எனது நன்றிகள்.
இந்த கிறுக்கலை எழுதுவதற்குள் ஏகப்பட்ட இடர்ப்பாடுகள்.காரணம் என்ன எழுதுவது!எப்படி எழுதுவது!ஏன் எழுதுவது! இப்படி பலதரப்பட்ட கேள்விகள்.இறுதியில் கேள்விகளுக்கும் முற்றுபெறாத பதிலாக எனது எழுத்துக்களை இங்கு இடம்பெயர வைத்துவிட்டேன்.
நான் படித்த மிகக்குறிய எழுத்துக்கள்.அவ்வெழுத்துக்கள் என்னை பலப்படுத்தியதா! பாதித்ததா!புரிந்ததா!புரியவில்லையா! தெரியவில்லை. ஆனால் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியது என்பதை உறுதியாக சொல்வேன்.
படிக்கும் பழக்கம் பல நாட்களாகவே இல்லை. தொழிலின் வழியால் ஏளனப்பார்வையுடன் சில புத்தகங்களை அரசல் புரசலாக படித்தேன். அப்புத்தகங்கள் ஒருவித தன்னம்பிக்கையை கொடுத்தன தவிற, படிக்கும் ஆர்வத்தை தூண்டவில்லை.
ஏன் என்னால் இப்பழக்கத்தை பழக்க முடியவில்லை. மறைமுகமாக ஆராய்ந்த போது எனக்குள் உள்ள "அகம்"
வெளிப்பட்டது. அந்த அகம்தான் பிறரின் எழுத்துக்களை கேலி செய்தது.
எனது தொழிலான சினிமாவில், எனக்கான அங்கீகாரம், எழுத்துக்களால், புத்தகங்களால் மறுக்கப்பட்டபோதுதான் சற்று தலை குனிந்தேன்.
எனக்கும்,எழுத்துக்கும் உள்ள இடைவெளி எனக்கு பல அனுபவங்களை கற்றுத்தந்தது.ஆம்,எழுதுவதற்கு முன்பு எழுத்தை பற்றிய வரையறையும், எழுதுவதற்க்கு பின்பு உள்ள வரையறையும் சேர்ந்து, எழுத்தை பற்றிய ஒரு வரையறையை தந்துள்ளதாக உணர்கிறேன்.
இந்த கிறுக்கலின் ஆரம்பம் ஏதோ ஒரு நல்ல முடிவை நோக்கி பயணிக்கிறது என்பது உண்மை.மேலும் கிறுக்கல்கள்தான் நாளை தெளிவாக்கப்படும் என நம்புகிறேன்........
Wednesday, August 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல துவக்கம்..அருமையான எழுத்து நடை..யாருடைய சாயலும் இல்லாதது பாராட்டக் கூடியது.
ஒவ்வொரு நாளின் அனுவங்களை எழுத முயற்சிக்கவும்.சுற்றும் உள்ளவர்களின் அந்தரங்களை தவிர்த்து.
முதற் கிறுக்களுக்கு கிடைத்த
முதற் பாராட்டுக்கள்
நன்றி சார்.....
Post a Comment